BI MONTHLY MEETING WITH PMG, SR SLATED ON 28.12.12
நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்த மதுரை மண்டலத்தின் இரு
மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி தற்போதைய PMG , CCR அவர்களால் 28.12.12
அன்று நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை மதுரை மண்டலப்
பிரச்சினைகள் குறித்து நமது மாநிலச் சங்கம் புகார்கள் பல அளித்துப் பேசியதாலும் ,
நமது மாநிலச் சங்கத்தின் மூலம் கடந்த 05.12.2012 இல் CPMG அவர்களுக்கு அளிக்கப்பட
நீண்ட புகார் பட்டியலின் அடிப்படையிலும் , 14.12.2012 அன்று PMG , CCR இடம்
நேர்காணல் நடத்தி பிரச்சினைகளை விவாதித்ததாலும் , தற்போது இந்த இரு மாதங்களுக்கு
ஒரு முறையிலான பேட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. நிச்சயம் பிரச்சினைகள் தீர்க்கப்
படும் என்று நம்புகிறோம்.

No comments:
Post a Comment