50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Monday, 7 January 2013

மதுரை PTC இயக்குனரின் அதிகார ஆணவத்திற்கு விழுந்த மரண அடி

அஞ்சல் பயிற்சி மையம் (PTC) , மதுரையில் LGO விலிருந்து எழுத்தராகத் தேர்வு பெற்று பணிப் பயிற்சிக்குச் சென்ற தோழர்களில் 12 பேர் , வகுப்புத் தேர்வில் 60% க்குக் குறைவாக மதிப்பெண் பெற்றதால் , பயிற்சி நீடிக்கப்பட்டு , பின்னரும் அடுத்த தேர்வில் 60% மதிப்பெண்களை எட்ட வில்லை என்று கூறி , பயிற்சி மைய இயக்குனரால் தகுதியற்றவர்களாக பரிந்துரைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக   திருச்சி மண்டலத்தில்  இரு தோழர்கள் பணி இறக்கம் செய்யப்பட்டு MTS /MAIL MAN ஆக பணிக்கப் பட்டனர்.
  

                   நமது மாநிலச்  சங்கங்களின் தீவிர நடவடிக்கைகளினால் அந்த அடாவடி ஆணை ரத்து செயப்பட்டுள்ளது. பதவி இறக்கம் செய்யப்பட்ட தோழர்கள் மீண்டும் பதவி உயர்வு செய்யப்பட்டு SORTING ASSISTANT ஆகப் பதவி நியமனம் வழங்கிட CPMG அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 
 
இது சட்ட விரோதமாக அடாவடி உத்திரவு இடும் தவறான அதிகாரிகளுக்கு ஒரு பாடம் என்பதை அறிவுறுத்த விரும்புகிறோம் !




No comments:

Post a Comment