50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Saturday, 10 March 2012

இன்னும் ஒருசில மாதங்களுக்கான மின்னிலை முன்னறிவிப்பு

சென்னை மின்னிலை ஆய்வு மையம் குமணன் மாமா அறிக்கை
இன்னும் ஒருசில மாதங்களுக்கான மின்னிலை முன்னறிவிப்பு
**************************
சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில்
கடும் இருட்டு சூழ்ந்திருக்கும்.

அவ்வப்போது மின்னலைப்போல் மின்சாரம் வந்துபோகும்
அறிகுறி தென்படுவதால் நள்ளிரவுத் திருடர்கள் வீடுகளில்
திருடச் சென்றால் தூக்கம் வராத மக்களிடம்
மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

பட்டப்பகலில் வங்கிகளின் அருகில் சென்றால்என்கவுண்டர்
தோட்டாக்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் வடநாட்டுக்
கொள்ளையர்கள் யாரும் கொள்ளைக்கு போகவேண்டாம்
என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

வெயில்நேரச் சூட்டுக்கு பயந்து ஒதுக்குபுறமான வீடுகளில்
வசிப்போர் கதவுகளை திறந்து வைத்துவிட்டு தூங்குவதால்
வீடுகளில் கொள்ளையடிப்பவர்களுக்கு இந்த பகல் நேரங்கள்
நல்ல பலனைக் கொடுக்கலாம்.

இன்னும் சில மாதங்கள் இந்த தட்ப வெப்ப நிலையே
நீடிக்கும் என்பதால் மாலைநேர வழிப்பறிக் கொள்ளையர்கள்
"ஹெல்மெட்" போட்டுக் கொண்டு இருசக்கர வாகனங்களில்
 தொழிலுக்குச் செல்வது நல்லது.

No comments:

Post a Comment