கட்டாய மின் விடுமுறை விடாத தொழிற்சாலைகளுக்கு அபராதம்
சென்னை, மார்ச். 3-
மின் பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலைகளுக்கு கட்டாய மின் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தவிர மேலும் ஒருநாள் தொழிற்சாலைகளுக்கு கட்டாயம் மின் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களையும் ஆறாக பிரித்து மின் விடுமுறை விடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர ஏனைய 6 நாட்களையும் பிரித்து அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு நாளில் மின் விடுமுறை கட்டாய விடப்பட வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எல்லா மாவட்டங்களிலும் இதற்கான நோட்டீசை தொழிற்சாலைகளுக்கு மின் வாரிய அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். சென்னையில் உள்ள சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கு புதன்கிழமை மின் விடுமுறை விடப்பட வேண்டும் என்று நோட்டீசு விநியோகிக்கப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சனிக்கிழமை மின் விடுமுறை விட வேண்டும். காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 மணி நேரம் கட்டாயம் தொழிற்சாலைகள் செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி செயல்பட்டால் தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.
மின்சார வாரியத்தின் உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகளுக்கு முதல் தடவையாக இருந்தால் பில் கட்டணத்தில் ஒரு மடங்கும், 2-வது முறையாக பிடிபட்டால் இரு மடங்கு அபராதமும் 3-வது முறையாக செயல்பட்டால் 3 மடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகள் திடீர்சோதனை செய்வார்கள். மின் விடுமுறை விடப்படும் நாளுக்கு முதல் நாள் மீட்டரில் உள்ள ரீடிங்கை கணக்கீட்டு செல்வார்கள். அந்த யூனிட்டை விட கூடுதலாக ஓடி இருக்குமானால் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் நேரில் சென்று நோட்டீசை விநியோகித்து கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.

No comments:
Post a Comment