50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Monday, 25 June 2012

இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், அதிகபட்சமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகள் குறித்து லான்செட் என்கிற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் நிகழும் மரணங்களில் மூன்று சதவீதம் தற்கொலையால் நிகழ்வதாக கூறும் லான்செட்டின் ஆய்வறிக்கை, தற்கொலை செய்து கொள்பவர்களில் அறுபது சதவீதமானவர்கள் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் என்கிற அதிர்ச்சித்தகவலையும் வெளியிட்டிருக்கிறது
மேலும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வசதிகளில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள் ஏற்கனவே இந்த துறையில் பணிபுரியும் தன்னையொத்த மனநல மருத்துவர்களின் கணிப்பை உறுதி செய்வதாக கூறும் சென்னை மருத்துவ கல்லூரியின் மனநல மருத்துவ பேராசிரியர் நம்பி, நகர்மயமாதல், பொருளாதார வசதிகள் அதிகரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பெருக்கம் ஆகிய அனைத்தும் தற்கொலைகளை தூண்டும் மறைமுக காரணிகளாக திகழ்வதாக கூறுகிறார்.
ஒரு பக்கம் இந்தியர்களின் வசதி வாய்ப்புகள் அதிகரித்தாலும், தனிமனித உறவுகள், (குடும்ப மட்டத்திலும் சரி, சமூக மட்டத்திலும் சரி) வேகமாக சிதைந்துவருவதாக கூறும் நம்பி, இப்படியான சூழலில் ஒருவருக்கு நெருக்கடி அல்லது மனச்சோர்வு ஏற்படும்போது பகிர்ந்துகொள்ள ஆளில்லாத நிலையில் நிர்கதியாக நிற்பதாக இளைய தலைமுறையினர் உணர நேரும்போது அதுவே தற்கொலைக்கான காரணியாக மாறுவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment