50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Friday, 29 November 2013

உதவிக்கரம் நீட்டுங்கள் ! நமது தோழருக்கு நம்மால் முடிந்ததை செய்யுங்கள் !


அன்புத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் !

மீண்டும் உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் ! 

நமக்காக 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில் நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து நீங்கள் ஆற்றிட வேண்டியது இது .

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக,பின்னர் கோட்டச் சங்கத்தின் தலைவராக , பின்னர் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக பணியாற்றிய நம் அருமைத் தோழர் E . V . என்று அழைக்கப் படும் தோழர். 
E . வெங்கடேசன் அவர்களின் ஒரே மகன் திரு. V .கார்த்திகேயன்அவர்கள் ( வயது 35) வேலூர் VIT இல் LAB INSTRUCTOR ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற அன்புத்தோழியர். சுஜாதா அவர்கள் தான் அவருக்கு துணைவியார் .

திரு . கார்த்திகேயன் அவர்கள் இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் இறுதியில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிறப்பு சிகிச்சை பெற சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள GLOBAL HOSPITAL-இல் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24 லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக தோழியர் சுஜாதா அவர்களே நிர்ணயிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.

MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து அறுவை சிகிச்சைக்காக 21லட்சம் கட்டி,கடந்த சனியன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது. தோழர். EV அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர். அவர்கள் பூரண குணமடைய நாம் வாழ்த்துகிறோம்.

இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம் நம்பிக்கை. உதவமுடிந்தவர்கள் உடன் கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

Com. P.Kumar,
Divl. Secretary, AIPEU Gr ‘C’
Arakonam Divl Br,
Arakonam 631 001. 

இந்த செய்தியை பார்க்கும் அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள் . இந்த செய்தியை தயவு செய்து உங்கள் பகுதித் தோழர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் . இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும் பார்க்கச் சொல்லியும் தெரிவிக்கவும்.


தோழர் E.V. அவர்களின் அலைபேசி எண் : 9003511724


காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது

Source : http://aipeup3tn.blogspot.in/

No comments:

Post a Comment