அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! தற்போது CMC மூலம் நடைபெற்ற எழுத்தர் தேர்வில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப் படவில்லை .இதற்கு காரணம் , குறைந்தபட்ச மதிப்பெண் கூட பல கோட்டங்களில் தேர்வு எழுதியவர்கள் பெறவில்லை என்று தெரிவிக்கப் படுகிறது .
கிட்டத்தட்ட 5.5லட்சம் இளைஞர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் போது, தேர்வில் குறைந்த பட்ச காலி யிடங்களுக்குக் கூட ஒருவரும் தேர்வாகவில்லை என்பது கேலிக்குரிய விஷயமாகும்.
இதற்கு முன்னர் நமது இலாக்காவே தேர்வு நடத்தும்போது நேரடி தேர்வுகளில் அனைத்து காலியிடங்களும் நிரப்பப் பட்டே வந்தன
என்பது உண்மையாகும் .
மேலும் 2011 மற்றும் 2012 க்கான நேரடி எழுத்தர் தேர்வுகளின் முடிவுகள் இப்போதுதான் வெளியிடப் பட்டுள்ளன. இத்தனை காலதாமதத்தினால் , காலியிடங்கள் நிரப்பப் படாமல் ஊழியர்கள் ஆட்பற்றாக்குறையில் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருவது கண்கூடு .
எனவே நமது மாநிலச் சங்கத்தின் மூலம் நமது அகில இந்திய பொதுச் செயலருக்கு ஒரு விளக்கமான கடிதத்தினை நாம் கோரிக்கையாக அளித்துள்ளோம்.
1) முதலில் தேர்வு நடத்திட இனி CMC நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்திடக் கூடாது .அப்படி 2013 க்கான ஒப்பந்தம் அளிக்கப் பட்டிருந்தாலும் கூட அது உடன் ரத்து செய்யப் பட வேண்டும்.
2) இனி நேரடி எழுத்தர் தேர்வுகளை STAFF SELECTION COMMISSION இடம் நடத்திட ஒப்படைக்கலாம்.அல்லது நமது இலாக்காவே முன்பு
போல நடத்திடலாம் .
3) முக்கியமாக தற்போது தேர்வு பெற்றவர்களுக்கு இன்னும் CERTIFICATE VERIFICATION , POLICE VERIFICATION , MEDICAL FITNESS போன்ற FORMALITIES முடிக்கப் படவேண்டும் . அதன் பிறகு PTC இல் SEAT ALLOTMENT பெற்று பயிற்சி முடிக்க வேண்டும். அதன் பின்னரே பணி நியமனம் செய்ய முடியும். மாறாக , ஆட்பற்றாக்குறையை கணக்கில் கொண்டு ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு RECRUITMENT இல் செய்தது போல அவர்களுக்கு உடனடி நியமனம் செய்திட இலாக்கா உத்திரவு பெற கோரியுள்ளோம். அப்போதுதான் தற்போது தேர்வு பெற்றவர்களும் கூட வேறு பணிக்கு செல்லாமல் நமது இலாகாவிலேயே பணியில் அமர்வார்கள் . நமக்கும் ஆட்பற்றாக்குறை பிரச்சினை ஓரளவுக்குத் தீரும் .
4) மேலும் நமது ஆட்பற்றாகுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண LSG பதவிகளை முந்தைய SENIORITY LIST அடிப்படையில் நிரப்புதல் , LR காலியிடங்களை நிரப்புதல் , தற்போதைய காலியிடங்களுக்கு விருப்பமுள்ள - தகுதியான தபால்காரர் /GDS / வெளியாட்களை அமர்த்த வேண்டியும் இலாக்கா மட்டத்தில் பேசிட வேண்டி கோரியுள்ளோம்.
5) காத்திருப்பு பட்டியலில் தற்போது பலர் இருப்பதாக தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அப்படி இருப்பின் அவர்களை மீதமுள்ள காலியிடங்களில் நிரப்பிடவும் தற்போது தனியே கோரியுள்ளோம்.
No comments:
Post a Comment