அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
தென் மண்டல PMG அவர்களுடன் NFPE இன் தமிழக அஞ்சல் RMS
இணைப்புக் குழு, நாம் அளித்த MEMORANDUM மீது கடந்த 21.01.2014
அன்று பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டது தெரிந்ததே .
அதன்படியே, இணைப்புக் குழுவுடன் பேச்சு வார்த்தை காலை 11.00
மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை தவிர , இரவு 07.00 மணி
வரை நடைபெற்றது. தனது உடல்நிலை சரியில்லாதபோதும் கிட்டத்தட்ட
7 மணி நேரம் நம்முடன் தென் மண்டல PMG அவர்கள் பேச்சுவார்த்தை
நடத்தியது, நிச்சயம் அவருக்கு தொழிலாளர் நலன் மீது உள்ள அக்கறையை காட்டுவதாகவே உள்ளது . அதற்கு முதலில் நமது நெஞ்சார்ந்த நன்றியை மனப்பூர்வமாக நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழியர் பிரச்சினையை எடுத்து வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீது
கோப உணர்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ கொள்ளாமல் , தனிமனித
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு , பிரச்சினைகளை, பிரச்சினை
களாகவே அணுகிய விதம் நிச்சயம் பாராட்டுக் குரியதே !அவரது அந்த
நாம் அளித்த MEMORANDUM இல் உள்ள அனைத்து பிரச்சினைகளும்
தீவிரமாக விவாதிக்கப்பட்டது .
அஞ்சல் மூன்றின் சார்பாக மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ்,
மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் சார்பாக மாநிலத்
தலைவர் தோழர். கண்ணன் , மண்டலச் செயலர் தோழர் முருகேசன்,
RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K சங்கரன், மண்டலச் செயலர்
தோழர். பாலமுருகன், RMS நான்கின் மாநிலச் செயலர் தோழர்.
K . ராஜேந்திரன் , மண்டலச் செயலர் தோழர் . செல்வராஜ் ,
GDS சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் , மாநிலச் செயலர்
தோழர். R .தனராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டனர் .
கீழ்க்கண்ட பிரச்சினைகளில் தீர்வு அளிப்பதாக உறுதி பெறப்பட்டது :-
1. IRREGULAR FIXING OF UNNATURAL REVENUE TARGETS FOR INDOOR OPERATIVE STAFF.
- இதில் நிச்சயம் எந்த ஒரு SPM/PA வுக்கும் நிர்ப்பந்தம் அளித்திட மண்டல
அலுவலகம் உத்திரவு இடவில்லை என்றும், அப்படி எந்த கோட்ட அதிகாரி
நடந்திருந்தாலும் அவர்கள் அறிவுறுத்தப் படுவார்கள் என்றும் உறுதி
அளிக்கப்பட்டது .
2. SPEED POST DELIVERY ON SUNDAYS :- இது குறித்து இலாக்கா உத்திரவு
எதுவும் தங்களுக்கு இதற்கு முன்னர் அளிக்கப்படவில்லை என்றும்
அப்படி அளிக்கப்பட்டால் நிச்சயம் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று
PMG தெரிவித்தார். நமது தரப்பில், இது குறித்த உத்திரவு நகல் உடன்
அனுப்பப்படும் என்றும் அதனையும் மீறி விடுமுறை நாட்களில் பணி
செய்திட உத்திரவு இடப்பட்டால் மீண்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்
என்றும் உறுதியாகத் தெரிவிக்கப் பட்டது.
3.RETURN BACK THE DEPUTATIONISTS FROM R.O.:- RPLI/PLI பகுதிகளில் MIGRATION
முடிந்தவுடன் FEBRUARY க்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள். PSD MMS
பகுதிகளில் ROTATION அடிப்படையில் இந்த ஆண்டு சரி செய்யப்படும் .
அதே பகுதிகளில் உபரி ஊழியர் இருப்பின் உடன் திருப்பி அனுப்பப்
படுவார்கள்.
4. மூடப் பட்ட மேலூர் தெற்கு அஞ்சலகம் திறந்திட உடன் உத்திரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறான உத்திரவிட்ட கோட்ட அதிகாரி மீது
மேல் நடவடிக்கைக்கு உயர் அதிகாரிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
5. தபால்காரர் பீட் கள் இணைக்கப் படாது . விடுப்புகளில் அவர்களது
பதிலி களுக்கு MINIMUM OF THE WAGES ஏற்கனவே உள்ள AUDIT PARA
அடிப்படையில், அரசரடி தலைமை அஞ்சலகத்தில் அளிப்பதுபோல
எல்லா இடங்களிலும் அளிக்கப் படும்.
6. வருடக் கணக்காக தேங்கியுள்ள மதுரை PSD பிரச்சினைக்கு கீழ்ப்
பகுதியில் SHED அமைப்பதற்கான ESTIMATE பெறப்பட்டுள்ளது. உடன்
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . அதுவரையில் HEAD LOAD என்பது
இல்லாமல் PULLY CONVEYANCE மூலம் முழுமையாக செய்யப் படும் .
6. 2005, 2006, 2007, 2008 ஆண்டுகளில் SKELETON இல் வைக்கப்பட்ட
தபால்காரர்,MTS காலியிடங்கள் ஏற்கனவே ஒழிக்கப்பட உத்திரவிடப்பட்டு
அமலாக்கப் பட்டது . தற்போது நமது சம்மேளனத்தின் முயற்சியால்
டெல்லி உயர் நீதி மன்றத்தில் பெறப்பட்ட தடை ஆணை அடிப்படையில்
28.05.2013 க்கு பிறகு இடப்பட்ட உத்திரவுகள் நிறுத்தப்பட்டு அந்த பதவிகள்
உடன் RESTORE செய்யப்படும் என உறுதி அளிக்கப் பட்டது. அதற்கான GDS
ENGAGEMENT மூலம் அந்தப் பணிகள் பார்த்திட பணிக்கப் படும்.
7. மதுரை RMS பகுதியில் தார்ணா மற்றும் ஆர்பாட்டங்களுக்கு வழங்கப்
பட்ட நோட்டீஸ் அமல் படுத்தப்படாது . 5 பேருக்கு வழங்கப் பட்ட DIES NON
APPEAL மூலம் ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப் படும்.
8. மதுரை RMS பகுதியில்தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு நிறுத்தி
வைக்கப் பட்டிருந்த SPECIAL CL அனைத்தும் உடன் வழங்கிட உத்திரவிடப்படும்.
9. மதுரை RMS SSRM அவர்களின் விதி மீறல் உத்திரவுகள் , ஒழுங்கீனமான
நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்படும். அதன்மீது, மேல்
நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரிக்கு பரிந்துரைக்கப் படும்..
10. மதுரை RMS HRO வின் நடவடிக்கைகள் குறித்து மண்டல அதிகாரிகள்
மூலம் விசாரணை செய்ய உத்திரவிடப் படும்.
11. தென் மண்டலத்தில் பணி நிறைவு, பதவி உயர்வு மற்றும் இறப்புகளில்
GDS ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் TERMINAL BENEFITS
இனியும் காலதாமதம் இன்றி வழங்கிட உடன் நடவடிக்கை எடுக்கப் படும்.
12. தென் மண்டலத்தில் பல வருடங்களாக REGULARISE செய்யப் படாமல்
இருக்கும் GDS பணி நியமனங்கள் குறுகிய கால வரம்புக்குள் சரி செய்யப்
பட்டு அதற்கான முறையான உத்திரவு வழங்கப் படும்.
13. சிவகங்கை COLLECTORATE அலுவலகப் பிரச்சினை ஏற்கனவே உறுதி
அளித்தபடி உடன் தீர்த்திட நடவடிக்கை எடுக்கப் படும்.
14. திண்டுக்கல் எழுத்தர் தோழர். சரவணகுமார் CONFIRMATION உத்திரவு
இடப்பட்டும் இன்னமும் நிறைவேற்றாமல் இருக்கும் அதிகாரியிடம் உடன்
விளக்கம் கேட்கப்படும். அவருக்கு எழுத்து மூலம் ஏற்கனவே உறுதி
அளிக்கப் பட்ட தேதியில் இருந்து CONFIRMATION வழங்கப் படும்.
15. வாடிப் பட்டி தோழர் காளிமுத்து இடமாறுதல் வரும் ஏப்ரல் மாதத்தில்
பரிசீலிக்கப் படும்.
16. இது போல PM GRADE I ஊழியர்களின் இடமாறுதல் கோரிக்கைகளும்
வரும் ஏப்ரல் மாதத்தில் பரிசீலிக்கப் படும்.
17. 16.07.2012 இலாக்கா உத்திரவுப்படி 1.1.2006 க்குப் பின் பணி நியமனம்
பெற்று முறையாக ஊதிய நிர்ணயம் செய்யப் படாமல் தேங்கிக் கிடக்கும்
ஊழியர்களுக்கு அரியர்சுடன் ஊதிய நிர்ணயம் செய்திட உத்திரவு
வழங்கப்படும்.
18. பழி வாங்கும் இடமாறுதல் உத்திரவு வழங்கப்பட்ட தூத்துக்குடி
தோழியர் துர்காதேவி பிரச்சினை குறித்து மீண்டும் கோட்ட
அலுவலகத்தில் இருந்து அவர் மீது தவறு இருப்பதாக அறிக்கை
அனுப்பப் பட்டுள்ளதால் , முதலில் 'மணப்பாடு' அல்லாமல் வேறு
அருகாமையில் உள்ள ஊருக்கு மாற்றித் தருவதாக PMG கூறினார்.
நாம் அதில் உண்மை இல்லை என்பதை எடுத்துக் கூறியதால் , அந்த
ஊழியரை PMG அவர்களே நேரில் விசாரித்து உண்மையை அறிந்து
கொள்வதாக உறுதி அளித்தார். அதுவரை அவருக்கு இடப்பட்ட மாறுதல்
உத்திரவு நிறுத்தி வைக்கப் படும்.
19. மதுரை HPO RMS பகுதியில் ENTRANCE அமைப்பது தொடர்பான
பிரச்சினையில் உரிய அதிகாரியை அனுப்பி அதற்கான வழி முறை
ஆராயப் படும் என்றும் அது குறித்து மதுரை POSTMASTER உடன்
கலந்து உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டது.
20. அம்பாசமுத்திரம் பகுதியில் LGO TO PA தேர்வு பெற்று பயிற்சிக்கு
அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மூன்று தோழர்களுக்கு
பணி பயிற்சிக்கு அனுப்பிட உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்று உறுதி அளிக்கப் பட்டது.
21. திருநெல்வேலி பகுதியில் காலியாக உள்ள MMS டிரைவர் பதவிகள்
RULE 38 மூலம் நிரப்பப் பட உடன் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது
நிலுவையில் உள்ள ஊழியரின் கோரிக்கை பரிசீலிக்கப் படும்.
22. தேனீ கோட்டத்தில் கடந்த தபால்காரர் தேர்வில் தேர்வு பெற்றும்
பணிப் பயிற்சிக்கு அனுப்பப் படாத தோழர். ரங்கப்பன் பிரச்சினை
குறித்து அறிக்கை பெற்று முடிவு எடுக்கப் படும்.
அன்புத் தோழர்களே !
இது தவிர இன்னும் பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியில்
அனைத்து சங்கங்களின் மாநிலச் செயலர்கள் மற்றும் மண்டலச்
செயலர்கள் கூடி இந்தப் பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் குறித்து
விவாதிக்கப் பட்டது . பெரும்பான்மை நிர்வாகிகளின் முடிவின்படி
இந்த பேச்சு வார்த்தைக்கான MINUTES நகல் மண்டல அலுவலகத்தில்
இருந்து பெற்றவுடன், அதனைப் பார்த்தபின், அதன் மீது அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது என இறுதியாக அறிவிக்கப் பட்டது.
போராடாமல் பெற்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை !
தொழிற் சங்க வரலாற்றில்
இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை !
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
இதுவே தொழிற்சங்கத்தின் ஆரம்ப பாடம் !
தோழமை வாழ்த்துக்களுடன்
ஜெ. இராமமூர்த்தி,
கன்வீனர் , அஞ்சல் RMS இணைப்புக் குழு
தமிழ் மாநிலம் .
=====================================================
ஊதியக்குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
JCA முடிவின்படியும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன முடிவின்
படியும் , நமது சம்மேளன மற்றும் நமது அகில இந்திய சங்கத்தின் முடிவின்
படியும் எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள
48 மணி நேர வேலை நிறுத்தத்தை நாம் ஒவ்வொருவரும் களம் இறங்கி
வெற்றிகரமாக்குவோம் !
நிச்சயம் நாம் கோரிக்கைகளை வெல்வோம் !
இன்றில்லையேல் தேர்தல் அறிவிக்கப் பட்டபின்
என்றுமே இல்லை என்பதை நினைவில் கொள்க !
போராடுவோம் ! வெற்றிபெறுவோம் !
இறுதி வெற்றி நமதே !
=====================================================
No comments:
Post a Comment