50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Thursday, 9 January 2014

மதுரை PTC யில் MACP II பயிற்சியில் பணிக்கப் பட்டுள்ள ஊழியர்களுக்கு 13.01.2014 அன்று விடுமுறை

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !  மதுரை PTC  யில் MACP  II  பயிற்சியில்  பணிக்கப் பட்டுள்ள  ஊழியர்களுக்கு , குறிப்பாக  பெண் ஊழியர்களுக்கு' பொங்கல் திருநாள் அன்று இல்லம் திரும்ப வழியில்லாமல்  பயிற்சி தேதி  13.01.2014 அன்றும்  உள்ளது என்றும் , இந்தப் பயிற்சி நாள் , ஏற்கனவே இரண்டாம் சனிக்கிழமையான 11.01.2014 க்கு மாற்றப்பட்டு 13.01.2014  'போகி' அன்று விடுமுறையை மாற்றி அமைத்தால்  அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும்  08.01.2014  அன்று  நாம் CHIEF  PMG   அவர்களுக்கு  கடிதம் அளித்து கோரினோம். கடிதத்தின் நகல்  08.01.2014 இல் நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது .

CHIEF PMG அவர்கள் ஊரில் இல்லாத போதும் , DPS  HQ  அவர்கள் கவனத்திற்கும் நாம் இதனை கொண்டு சென்றோம் .  இந்தப் பிரச்சினையில் உடன் கவனம் செலுத்தி  இன்றே (08.01.2014)  மதுரை பயிற்சி மைய இயக்குனர் அவர்களுக்கு CPMG  அலுவலகம் மூலம்  உடன்  பயிற்சி தேதி மாற்றி அமைத்து  13.01.2014 அன்று விடுமுறை அறிவித்திட  கடிதம்  அளிக்கப் பட்டு அதன் நகலும் நமக்கு அளிக்கப் பட்டுள்ளது  என்பது மட்டற்ற மகிழ்ச்சியே !  

இந்தப் பிரச்சினையில் , தமிழர்  பண்டிகையின் முக்கியத்துவம் ணர்ந்து நம் கோரிக்கையை உடனே ஏற்று  இந்தக் கடிதத்தை பயிற்சி மைய இயக்குனருக்கு அனுப்பிடப் பணித்த  

நமது CPMG  MS . இந்து குப்தா அவர்களுக்கும் , 
உடன்  நடவடிக்கை எடுத்த  
நமது  DPS  HQ  திரு . A . கோவிந்தராஜன் அவர்களுக்கும்
  
நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பாக நன்றியைத் 
தெரிவித்துக் கொள்கிறோம் . 

ஏற்கனவே  நமது கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகை 
காலத்தில்  உத்திரவிடப்பட்ட END  USERS  TRAINING  மாற்றியமைக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும் ! 
அதற்கும்  உடன் ஆவன செய்திட்டவர் நமது DPS  HQ அவர்களே  
என்பதும்  உங்கள் கவனத்திற்கு  அளிக்கிறோம் . 

No comments:

Post a Comment