50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Friday, 17 January 2014

STRIKE RELATED POSTAL & RMS JCA MEETINGS AT TAMILNADU CIRCLE

 அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் .

எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள 
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின்,  50% பஞ்சப்படி அடிப்படை
 ஊதியத்துடன் இணைப்பு,  இடைக்கால நிவாரணம் வழங்குதல் ,
 GDS  ஊழியர்களையும் ஊதியக் குழு வரம்புக்குள் கொண்டுவருதல்
 உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளின் மீதான 48  மணி நேர வேலை
 நிறுத்தத்தில்  கலந்துகொண்டிட  நமது  அஞ்சல் சம்மேளனங்களான
NFPE மற்றும்   FNPO  ஆகியவை  அழைப்பு விடுத்துள்ளன . 

இது குறித்து தமிழக அஞ்சல் - RMS - MMS - GDS  அமைப்புகளின்  NFPE 
 மற்றும் FNPO மாநிலச் செயலர்களின் JCA   ஆலோசனைக் கூட்டம்  
நாளை 17.01.2014 அன்று மாலை  சுமார் 06.00 மணியளவில்  சென்னை 
அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற உள்ளது . 
இதில்  தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக 
நடத்திட முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் .

மேலும் எதிர்வரும் 03.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில்  
 சென்னை   CPMG  அலுவலக வளாகத்தில்  உள்ள MEETING  HALL   இல்  நமது 
JCA சார்பாக வேலை நிறுத்த  விளக்கக் கூட்டம்  நடைபெற உள்ளது. இதில்  
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரும் நமது  
பொதுச் செயலருமான  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு
 வேலை நிறுத்த உரை ஆற்றிட உள்ளார்கள் என்பதையும்  முன் கூட்டியே 
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் .

 சென்னை  நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்
  பெருவாரியான தோழர்கள்  இந்தக் கூட்டத்தின்  தவறாமல் கலந்து 
கொண்டிட வேண்டுகிறோம் !

இதர  ஏற்பாடுகள் குறித்து  நாளைய JCA  கூட்டத்தில் எடுக்கப்படும் 
முடிவுகளின் அடிப்படையில் அறிவிப்பு செய்யப் படும் .

No comments:

Post a Comment